உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., நீர்மோர் பந்தல் திறப்பு

பா.ஜ., நீர்மோர் பந்தல் திறப்பு

ப.வேலுார்: ப.வேலுார் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் நடந்தது.பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பரமத்தி ஒன்றிய பா.ஜ., தலைவர் அருண் தலைமை வகித்தனர். கபிலர்மலை ஒன்றிய தலைவர் வரதராஜ், மாவட்ட துணை தலைவர்கள் வடிவேல், கார்த்திக், நவலடி, பழனியப்பன், பத்மராஜ், வக்கீல் காந்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். கோடை காலம் முடியும் வரை காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நீர்மோர் பந்தல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்திருக்கும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி