வங்கதேச ஹிந்துக்கள் மீது தாக்குதலை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்: 118 பேர் கைது
நாமக்கல்: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் தாக்கு-தலை கண்டித்து, நாமக்கல்லில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ.,வினர், 118 பேரை போலீசார் கைது செய்தனர்.வங்கதேசத்தில், ஹிந்துக்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்கு-தலை கண்டித்து, பா.ஜ., சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்குமார் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வங்கதேசத்தில், கடந்த ஆகஸ்டிற்கு பின், புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, அரசியல் சூழ்நிலை காரணமாக, ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகி-றது. 6,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் அரங்கேறி உள்ளன. ஹிந்து மக்கள் கொல்லப்பட்டதுடன், சொத்துக்களும் சூறையா-டப்பட்டுள்ளன. சமீபத்தில், துர்கா பூஜை நடந்தபோது, தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. பல வகையிலும் ஹிந்துக்கள் தாக்கப்ப-டுகின்றனர். ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை, அந்-நாட்டு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்க-ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., நிர்-வாகிகள், பெண்கள் உள்பட, 118 பேரை, ஏ.எஸ்.பி., ஆகாஷ்-ஜோசி, கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமையிலான போலீசார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.