விநாயகர் சிலை விற்பனை சிறுவர், சிறுமியர் ஆர்வம்
ராசிபுரம், நாடு முழுவதும், வரும், 27ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியில் களிமண் மற்றும் பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 6 இன்ச் முதல், 15 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 2 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகள் பெரும்பாலும் ஆர்டரின் பேரில் தான் தயாரிக்கப்படுகிறது. இவைகளை தயாரிக்கும் குடோன்களில் இருந்தே நேரடியாக எடுத்து செல்கின்றனர். சிறிய ரக விநாயகர் சிலைகள், நகர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடைகளில் உள்ள சிறிய விநாயகர் சிலைகளை குழந்தைகள், மாணவ, மாணவியர் அதிகளவு வாங்கி செல்கின்றனர். 200 ரூபாயில் இருந்து, 800 ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.