மேலும் செய்திகள்
ஓடையில் தவறி விழுந்தவர் பலி
15-Jul-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி தறித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில், கிட்னி புரோக்கர்கள் நடமாட்டம், கடந்த ஓரிரு ஆண்டாக அதிகரித்துள்ளது.இவர்கள், கடன் பிரச்னை, குடும்ப சூழ்நிலையால் அவதிப்படும் தொழிலாளர்களை குறிவைத்து, கிட்னி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என, ஆசைவார்ததை கூறி மூளைச்சலவை செய்துவருகின்றனர். மேலும், கிட்னி கொடுக்க விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான ஆவணங்களையும் புரோக்கர்களே தயார் செய்து கொடுக்கின்றனர். இதுகுறித்து கடந்தாண்டு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., கவுன்சிலர் பாலசுப்ரமணியம், முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார். இந்நிலையில், அன்னை சத்யா நகர் பகுதியில் கிட்னி புரோக்கர்கள், அப்பகுதியை சேர்ந்த பல தொழிலாளர்களை குறி வைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி கொடுத்தால், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறி வருகின்றனர்.இதுகுறித்த, தகவலறிந்த பள்ளிப் பாளையம் போலீசார், நேற்று இரவில் இருந்து அன்னை சத்யாநகர் பகுதியில் கிட்னி புரோக்கர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Jul-2025