உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்புவெண்ணந்துார், அக். 16-வெண்ணந்துார் அடுத்த அத்தனுார், ஆயிபாளையம், வெண்ணந்துார், நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில், 100-க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், வெண்ணந்துார் பகுதியில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூளையில் கொளுத்திய செங்கல், மழையால் கருத்து வீணாகி விட்டது. மேலும், படுகையில் மழைநீர் தேங்கி, வாகனங்களும் உள்ளே செல்ல முடியாததால், விற்பனைக்கு தயாரான செங்கல்லையும் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது ஒரு செங்கல், 7.50 ரூபாய்-க்கு விற்கப்படும் நிலையில், மழை தொடர்ந்து நீடித்தால் விலை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை