உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வேலை நிறுத்த போராட்ட எச்ச-ரிக்கை

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வேலை நிறுத்த போராட்ட எச்ச-ரிக்கை

பள்ளிப்பாளையம்: கறிக்கோழி பண்ணை விவசாயிகள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்-டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த தொட்டிகாரன்பாளையம் பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து, கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் ஜெயமணி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திட்டமிட்டபடி, 10 அம்ச கோரிக்-கையை நிறைவேற்ற கோரி, அரசு தரப்பில் முத்-தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இன்று முதல் பண்ணைகளில் குஞ்சுகளை உற்பத்தி செய்யாமல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்-வது; சங்கம் எடுக்கும்முடிவுக்குகட்டுப்படுவது, என, தீர்மானம் நிறைவேற்றினர். 50க்கு மேற்பட்ட கோழிப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ