மேலும் செய்திகள்
'கவனிப்பால்' திடீரென முளைக்கும் காய்கறி சந்தைகள்
26-Aug-2025
ராசிபுரம்;புரட்டாசி மாதம் தொடங்கினாலே, தமிழகத்தில் பெரும்பாலான ஹிந்துக்கள் வீட்டில் அசைவம் சமைப்பது இல்லை.இதனால் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில், நேற்று புரட்டாசி முதல்வாரம் ஞாயிற்றுக்கிழமையிலேயே அமாவாசையும் வந்துவிட்டது.இதனால், நேற்று ராசிபுரத்தில் உள்ள, 90 சதவீதம் கறிக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மார்க்கெட், காட்டூர் ரோடு, பட்டணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கறிக்கடைகள் மூடப்பட்டிருந்தன.இதனால் இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. அதேபோல், நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி ரோடு பகுதியில் கறிக்கைடைகள் அதிகம் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவு கூட்டம் இருக்கும். ஆனால், நேற்று இப்பகுதியிலும் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
26-Aug-2025