மேலும் செய்திகள்
பருத்தி பயிர் காப்பீடு இணை இயக்குனர் தகவல்
05-Jul-2025
நாமகிரிப்பேட்டை :நாமகிரிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு காரீப் பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம்.பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள், முன்மொழி படிவத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், விதைப்பு சான்று, ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். மேலும், பயிர்காப்பீடு செய்ய பாசிப்பயிறுக்கு ஜூலை, 15; நிலக்கடலை, சோளத்திற்கு, ஆக., 16; மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி, மஞ்சள், வாழைக்கு, செப்., 16; சின்னவெங்காயம், தாக்காளிக்கு, செப்., 1 வரை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன் பெறலாம். விபரங்களுக்கு, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
05-Jul-2025