டிராக்டர் வாடகைக்கு விட விவசாயிகளுக்கு அழைப்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண் பொறியியல் துறை உதவிப்பொறியாளர் பிரவின்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், டிராக்டர் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் டிராக்டரை வாடகைக்கு விட பதிவு செய்யலாம். பிற விவசாயிகளுக்கு உழவுப்பணி செய்து தர விருப்பமுள்ள விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். விவசாயிகள், 9789532100 என்ற தொலைபேசியில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.