மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி
19-Sep-2024
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
25-Sep-2024
நாமக்கல்: திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தெற்கு அரங்குரை சேர்ந்தவர் மகாமுனி மனைவி சாந்தி, 30. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கணவரின் தம்பி சரவணன், 29 என்பவருடன், கூலி வேலைக்கு சென்று விட்டு, 'ஹோண்டா' டூவீலரில் ஒருவந்துாரிலிருந்து தேவர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒருவந்துார்புதுார் பால் சொசைட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த, 'ஸ்கார்பியோ' கார் பின் சீட்டில் அமர்ந்திருந்த சாந்தியின் கையில் மோதியது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாந்தி படுகாயமடைந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Sep-2024
25-Sep-2024