உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூலித்தொழிலாளி மீது கார் மோதி விபத்து

கூலித்தொழிலாளி மீது கார் மோதி விபத்து

குமாரபாளையம், குமாரபாளையம், ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 33; செண்டரிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலை, பெட்ரோல் பங்க் எதிரில், நாதன் பேக்கரி அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கோடா கார் இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவர், திருப்பூர் மாவட்டம், மைலாடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் செந்தில்வேல், 39, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !