உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது கார், ஜீப் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

டூவீலர் மீது கார், ஜீப் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சீரங்கன், 68; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, டி.வி.எஸ்., எக்ஸல் வாகனத்தில், பல்லக்காபாளையம் தனியார் கல்லுாரி பிரிவு அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, கோவை பக்கமிருந்து வந்த கார் இவர் மீது மோதியது.இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சீரங்கன் மீது, பின்னால் வந்த பொலீரோ ஜீப் மோதியதில் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சீரங்கன் மகன் சரவணன், 44, கொடுத்த புகார்படி, பொலீரோ ஜீப் டிரைவர், பெங்களூரை சேர்ந்த கணேசன், 44, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை