உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சைக்கிள் மீது பஸ் மோதி தச்சு தொழிலாளி பலி

சைக்கிள் மீது பஸ் மோதி தச்சு தொழிலாளி பலி

சைக்கிள் மீது பஸ் மோதிதச்சு தொழிலாளி பலிநாமக்கல், அக். 5-நாமக்கல் - பரமத்தி சாலையை சேர்ந்தவர் வீராசாமி, 55. இவர், அப்பகுதியில் உள்ள லாரி பட்டறையில் தச்சராக வேலை செய்து வந்தார். நேற்று காலை, 9:40 மணிக்கு சைக்கிளில், நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். காவேட்டிப்பட்டி அடுத்த குப்பம்பாளையம் பகுதியில் சென்றபோது, கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ், சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த வீராசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ