உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநகராட்சி கமிஷனருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

மாநகராட்சி கமிஷனருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி கமிஷனருக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.நாமக்கல் மாநகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார், 47. இவர் நேற்று நாமக்கல் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், தமிழக மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மாநகராட்சி டிரைவர் கருணாநிதியை சுந்தரமூர்த்தி, துாய்மை பணியாளர் ஜெயந்தன், டிரைவர் குப்புசாமி ஆகியோர் தாக்கியதாகவும் கூறி இருந்தார்.மேலும் சமாதானம் செய்ய வந்த மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு, சுந்தரமூர்த்தி, சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி போலீசார், தொழிற்சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, தமிழ்செல்வி, துாய்மை பணியாளர் ஜெயந்தன், டிரைவர் குப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ