மேலும் செய்திகள்
தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு
28-Jun-2025
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி, சந்திரம்பாளையம் சுடுகாடு அருகே, நேற்று காலை சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 26, அவரது நண்பர் பிரபு, 27, ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சுபாஷ், 29, மதியழகன், 22, சுபாஷ், நவீன், 22, ஹரிபிரகாஷ், 22, கார்த்திகேயன், 25, கதிரவன், 26, ஆகியோர், விக்னேஷ், பிரபுவை தாக்கினர். இதில், விக்னேஷ், பிரபு காயமடைந்தனர்.அவர்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, விக்னேஷ் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து, நவீன், ஹரிபிரகாஷ், கார்த்திகேயன், கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.
28-Jun-2025