மேலும் செய்திகள்
டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் மீது வ
20-Mar-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டாஸ்மாக் கடையில், முதல்வர் படத்தை ஒட்டிய, ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் ஊழலை கண்டித்து, பா.ஜ., மகளிரணியினர் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் போட்டோவை ஒட்டி வருகின்றனர். அவர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டையில், கடந்த, இரண்டு தினங்களுக்கு முன், பா.ஜ., மகளிரணி மற்றும் நிர்வாகிகள் சிலர் முதல்வர் போஸ்டரை ஒட்டி சென்றனர். இதில், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், 38, மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கார்த்தீஸ்வரன், 37, மணிகண்டன், 35, சுந்தரம், 48, ரவி, 45, மற்றும் இரண்டு பெண்கள் உள்பட, ஏழு பேர் மீது நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், பா.ஜ.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
20-Mar-2025