உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு

புதுச்சத்திரம் அருகே ஒப்பந்ததாரர் மீது வழக்கு

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், கலங்கானி பஞ்.,ல், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை பாலு என்பவர் ஒப்பந்தம் எடுத்து பணியை துவங்கினார்.ஆனால், அவர் பணியை தொடர்ந்து செய்யாமல் விட்டதாக தெரிகிறது. பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதால், பழனிவேலு என்ற ஒப்பந்ததாரருக்கு, பி.டி.ஓ., பணியை மாற்றி வழங்கியுள்ளார். இந்த பணி முடிந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பாலு, செய்த வேலைக்கான தொகையை பழனிவேலுவிடம் கேட்டுள்ளார்.இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு ஒப்பந்ததாரர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புதுச்சத்திரம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புகார்படி, பழனிவேல் என்ற ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ