உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்

26ல் காவிரி, கள் உரிமை மீட்புகருத்தரங்கம்: நல்லுசாமி தகவல்

நாமக்கல்:''நாமக்கல்லில், வரும், 26ல் காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடக்கிறது,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்தார்.நாமக்கல்லில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கள் இறக்குவோர் மீது மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவிர்க்க வேண்டும். கடந்த, 35 ஆண்டு காலமாக கர்நாடகா அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது கிடையாது. அணை உடையும் அபாயத்தில் தான், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுகிறது. காவிரியில் தினந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதை, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வரும், 26ல் நாமக்கல்லில் காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயர் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை