உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

வரத்து அதிகரிப்பால் கரைபுரண்ட காவிரி

பள்ளிப்பாளையம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர், இருகரைகளையும் தொட்டுக்கொண்டு பாய்ந்தோடுகிறது. சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சுவாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு செல்கிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடைவிதித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !