புனித செசிலி அன்னை ஆலயத்தில் வரும் 22ல் தேர் திருவிழா
மோகனுார், மோகனுார் அடுத்த ஆர்.சி., பேட்டப்பாளையத்தில், சேலம் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட, புனித செசிலி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, வரும், 22ல் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, வரும், 20 மாலை, 6:00 மணிக்கு, சேலம் மூவேந்தர் அருட்பணி நிலைய இயக்குனர் ஹென்றி கிஷோர் தலைமையில், கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது.நவ., 21 மாலை, 6:00 மணிக்கு, சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி முதல்வர் ஸ்டான்லி சேவியர் தலைமையில் திருப்பலியும், நவ., 22 மாலை, 6:00 மணிக்கு, சேலம் மறைமாவட்டம், முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமையில், திருவிழா திருப்பலியும், ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனித செசிலி அன்னை எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். வழி நெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குகின்றனர். நவ., 23ல், காலை, 8:30 மணிக்கு, பங்கு தந்தை ஜான் பிரிட்டோ தலைமையில், நன்றி திருப்பலியும், கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.