மேலும் செய்திகள்
சாலையில் தேங்கிய குப்பை தொற்று நோய் அபாயம்
21-Oct-2024
செல்லாண்டியம்மன் கோவில்தெருவில் கழிவு நீரால் நாற்றம்நாமக்கல், அக். 23-நாமக்கல் மாநகராட்சி கோட்டை பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம், செல்லாண்டியம்மன் கோவில் உபத்தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி சாக்கடை உடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள காலி இடத்தில் குளம்போல் தேங்கியுள்ளது. கழிவுநீர் தொடர்ந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களை கடித்து வருகிறது. இரவில் மக்கள் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பொதுமக்கள் நிலையை கருத்தில் கொண்டு, கழிவுநீர் தேங்காமலும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கவும், மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
21-Oct-2024