உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சென்னை - பினாங்கு விமான சேவை இன்று துவக்கம்

சென்னை - பினாங்கு விமான சேவை இன்று துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து மலேஷியா நாட்டின் பினாங்கு தீவுக்கு,நேரடி மற்றும் தினசரி விமான சேவை இன்று துவங்குகிறது.மலேஷியா நாட்டில், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி பினாங்கு. அங்கு செல்ல, சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. சென்னை - பினாங்கு இடையே, தினசரி மற்றும் நேரடி விமான சேவை வேண்டும் என்பது, பயணியரின் நீண்ட நாள் கோரிக்கை.இந்நிலையில், 'இண்டிகோ' நிறுவனம், இன்று முதல் தினசரி மற்றும் நேரடி சேவையை வழங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து அதிகாலை, 2:15 மணிக்கு புறப்படும் விமானம், 6:40 மணிக்கு பினாங்கு சென்றடையும்.அங்கிருந்து இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, காலை, 10:30 மணிக்கு சென்னை வந்தடையும். 'ஏர்பஸ் ஏ 320' ரக விமானங்கள் இயக்கப்படுவதால், 170க்கும் மேற்பட்டோர், இதில் பயணிக்கலாம்.சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக செல்வோருக்கு, இந்த சேவை பயன் உள்ளதாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ