அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களான நோட்டு, பென்சில், ரப்பர் வழங்கினார். குழு நிர்வாகிகள் அன்ப-ழகன், ராஜா, மோகன், சரவணன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.