வட்ட வழங்கல் அலுவலகம் இடமாற்றம்
குமாரபாளையம், குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம், 2வது தளத்தில் அமைந்திருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் படி ஏறி வர கடும் சிரமப்பட்டு வந்தனர்.புதிய ரேஷன் கார்டில் ஆதார் பதிவு, உள்ளிட்ட சில விபரங்கள் கேட்கவும், அதனை சரி செய்து கொண்டு வந்து விண்ணப்பிக்கவும் பல முறை, வட்ட வழங்கல் அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலகம், குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தின் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.