மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தின், 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோதி குப்புசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சங்க புதிய தலைவராக வெங்கடாஜலம், செயலாளராக நேதாஜி, பொருளாளராக சகாதேவன், பி.ஆர்.ஓ.,வாக சக்கரவர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு, சங்க மாநில தலைவர் விஜயபானு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்துகொண்டனர். சங்க நிர்வாகிகள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
02-May-2025