உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: நாமக்கல்லில் கடைசி 10 இடம் பிடித்த அரசு பள்ளி விபரம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: நாமக்கல்லில் கடைசி 10 இடம் பிடித்த அரசு பள்ளி விபரம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகி-தத்தில், பள்ளிப்பாளையம் காவிரி ஆர்.எஸ்., உயர்நிலைப்பள்ளி மாவட்டத்தின் கடைசி இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. நாமக்கல் மாவட்டத்தில், 295 பள்ளிகளை சேர்ந்த, 18,764 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 17,736 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 94.52 சதவீதமாகும். இதன் மூலம், மாநில அளவில், 19ம் இடத்தை நாமக்கல் பெற்-றுள்ளது. கடந்தாண்டை விட, 1.01 சதவீதம் கூடுதலாக பெற்-றாலும், கடந்தாண்டில், 14ம் இடம் பெற்ற நிலையில், இந்-தாண்டு, ஐந்து இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பின்-னடவை சந்தித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதால், மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், நாமக்கல் மாவட்டம், தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது. மாவட்டத்தில் உள்ள, 155 அரசு பள்ளிகளில், 40 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், கடைசி பத்து இடங்களை அரசு பள்ளிகள் பெற்றுள்ளன.அதன் விபரம் பின்வருமாறு: பள்ளிப்பாளையம் காவிரி ஆர்.எஸ்., உயர்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது. இப்பள்ளி, 72 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்-றுள்ளது. 14 மாணவ, மாணவியர் தோல்வியடைந்துள்ளனர். மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 74.65 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில், 18 பேர் தோல்வியடைந்-துள்ளனர். விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 78.38 சதவீதம், திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 78.57, திருச்செங்கோடு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 80.95, கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 81.08, அலங்கா-நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, 81.82, ஆயில்பட்டி அரசு உயர்-நிலைப்பள்ளி, 82.22, ராசிபுரம் அண்ணாசலை அரசு மேல்நி-லைப்பள்ளி, 83.33, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்-பள்ளி, 83.43 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன. இந்த பத்து பள்-ளிகளிலும், மொத்தம், 673 மாணவ, மாணவியர் தேர்வு எழு-தினர். அவர்களில், 541 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 132 பேர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி