உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மலைப்பாதையில் துாய்மைப்பணி

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மலைப்பாதையில் துாய்மைப்பணி

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் மிக முக்கியமானது, கடையேழு வள்ளல்-களில் ஒருவரான, 'ஓரி' மன்னன், கொல்லிமலையை தலைமையி-டமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும்.ஓரி மன்னனின் கொடைத்தன்மை, வீரத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், ஆடி, 17, 18ல், தமிழக அரசு சார்பில், 'வல்வில் ஓரி' விழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு விழாவை முன்னிட்டு, அடிவாரம் முதல் சோளக்காடு வரை உள்ள மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவு-களில் உள்ள மரக்கிளைகள், செடி, கொடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், தடுப்பு சுவர்களில் வர்ணம் தீட்டுவது போன்ற பணிகள் நடந்து வருகிறது.அதேபோல், கோவை, நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் இயங்கும் அரசு பஸ்களை, வல்வில் ஓரி விழா நடப்பதை-யொட்டி ஆக., 2, 3ல் சிறப்பு பஸ்களாக, நாமக்கல், ராசிபுரம், சேலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் என, போக்கு-வரத்து துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை