உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டயர் கடையில் நாகப்பாம்பு மீட்பு

டயர் கடையில் நாகப்பாம்பு மீட்பு

நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலையில், மணி என்பவர் பழைய டயர் ரீட்ரெட்டிங் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம், 12:00 மணிக்கு நிறுவனத்தில் திடீரென, 5 அடி நீள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. அதைக்கண்ட மணி உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த வீரர்கள், டயருக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து, காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை