உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.8 சரிவு;விவசாயிகள் கவலை

தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.8 சரிவு;விவசாயிகள் கவலை

தேங்காய் பருப்பு கிலோவுக்குரூ.8 சரிவு;விவசாயிகள் கவலைப.வேலுார், நவ. 29--ப.வேலுார் அருகே, தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு கிலோவுக்கு, எட்டு ரூபாய் சரிந்து விற்பனையானதால், விவசாயிகள் கவலையடைந்தனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 8,650 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 147.10 ரூபாய், குறைந்தபட்சமாக, 120.99 ரூபாய், சராசரியாக, 138.83 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், எட்டு லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,450 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 138.69 ரூபாய், குறைந்தபட்சமாக, 125.39 ரூபாய், சராசரியாக, 132.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், எட்டு லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு கிலோவுக்கு, எட்டு ரூபாய் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை