தேங்காய் பருப்பு விலை சரிவு
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர்.கடந்த வாரம், 16,250 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 264.99 ரூபாய், குறைந்தபட்சம், 222.89 ரூபாய், சராசரி, 263.49 ரூபாய் என, மொத்தம், 39 லட்சத்து, 90,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 22,473 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 235.99 ரூபாய், குறைந்தபட்சம், 222.99 ரூபாய், சராசரி, 228.89 ரூபாய் என, மொத்தம், 51 லட்சத்து, 43,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.