மேலும் செய்திகள்
பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை
20-Nov-2024
இடிந்த தடுப்புச் சுவரால்அரசுப்பள்ளியில் அச்சம்டி.என்.பாளையம், டிச. 4--டி.என்.பாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரை, 327 மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி தடுப்புச்சுவர், தற்போது ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது.இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. மேலும் இரவில் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும். அல்லது புதியதாக கட்டித்தர வேண்டும் என்று, பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
20-Nov-2024