உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வுநாமக்கல், அக். 11-திருச்செங்கோடு பகுதியில் உள்ள, அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.திருச்செங்கோடு வட்டம், சீனிவாசம்பாளையம், கருவேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும், பல்வேறு அரசு திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். சீனிவாசம்பாளையத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் விபர பதிவேடு, வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு விபரம், உணவு பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாகவும், மழை காலங்களில் சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்காத வகையில் பராமரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்திருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். கருவேப்பம்பட்டியில், சுகாதார வளாகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை