உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விஜயமங்கலத்தில் கண்காட்சி விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

விஜயமங்கலத்தில் கண்காட்சி விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நாமக்கல், 'விஜயமங்கலத்தில் நாளை துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண் சார்பில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (ஜூன், 11) நாளை மறுநாள் (ஜூன், 12) என இரண்டு நாட்கள், மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். கண்காட்சியில் வேளாண் துறை மற்றும் அதனுடன் இணைந்த துறைகளை சேர்ந்த அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும், விவசாயிகளை கண்காட்சிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு, மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ