உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பலாத்கார வழக்கில் கல்லூரி ஆசிரியர் கைது

பலாத்கார வழக்கில் கல்லூரி ஆசிரியர் கைது

நாமக்கல்:நாமக்கல் அரசுக் கல்லுாரி முன்னாள் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த உதவிப் பேராசிரியரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை மேலுாரைச் சேர்ந்தவர் பிரதாப், 44; நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி உதவி பேராசிரியர். இதே கல்லுாரியில் படித்த 22 வயது மாணவி ஒருவர், உதவி பேராசிரியர் பிரதாப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, நாமக்கல் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி பேராசிரியர் பிரதாப்பை நேற்று முன் தினம் கைது செய்தனர். பின், நாமக்கல் எஸ்.சி.எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில், பிரதாப்பை ஆஜர்படுத்தினர். நீதிபதி சாந்தி, அக்., 7- வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மத்தியச் சிறையில் பிரதாப் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை