உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொ.ம.தே.க., ரத்த தான முகாம்

கொ.ம.தே.க., ரத்த தான முகாம்

கொ.ம.தே.க.,ரத்த தான முகாம்சேந்தமங்கலம், அக். 5-சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நேற்று கொ.ம.தே.க., சார்பில் இலவச ரத்த தான முகாம் நடந்தது. டாக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். இதில், கொ.ம.தே.க.,வை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். வட்டார மருத்துவர் வடிவேல், மாவட்ட துணை ‍செயலாளர் செந்தில் ராஜா, தமிழரசு, ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ