சம்பள நிலுவை வழங்க கோரிமா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன், மா.கம்யூ., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த, மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்தாண்டிற்கு, நுாறு நாட்கள் முழுவதுமாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ் ,வெங்கடாசலம், மூத்த உறுப்பினர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின், பி.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.