உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆரோக்கியமான விஷயத்திற்கு போட்டி இருக்க வேண்டும்

ஆரோக்கியமான விஷயத்திற்கு போட்டி இருக்க வேண்டும்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பா.ஜ., நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது: ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விஷயத்திற்கு போட்டி இருக்க வேண்டும். மாநில தலைவர் தேர்தல் முடிந்த பின், இரண்டாம் கட்டமாக, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்துவிட்டால், 2026ல் நாம் ஆட்சியை பிடிப்பது நிச்சயம். ஆட்சி மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் உள்ள முக்கியமான, 10 ஆறுகளில், 6 ஆறுகள் மிகவும் மாசடைந்துள்ளது. ஆணவ கொலைகள், பாலியல் வன்முறை என, குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. டாஸ்மாக் மட்டும் தான் சக்சஸ். மற்ற எல்லாம் தோல்வி தான்.இரண்டு மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள், நம்மை மதவாதிகள் என்கின்றனர். இப்தார் விருந்தில் மட்டும் குல்லா போட்டு உட்காருபவர்கள், மதச்சார்பின்மை குறித்து பேசுகின்றனர். கடன் வாங்கி, கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப, நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி