உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடத்துக்கு போட்டி தேர்வு

நாமக்கல்: 'கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், நேற்று (அக்., 5) முதல் ஹால் டிக்கட் டவுன்-லோடு செய்து கொள்ளலாம்' என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு சங்கங்-களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவ-னங்களில், நாமக்கல் மண்டலத்தில் காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும், 11ல், காலை, 10:00 மணிக்கு போட்-டித்தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்-டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது ஹால் டிக்கெட்டை, நேற்று (அக்., 5) முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக விளக்கம் தேவைப்பட்டால், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை, 04286 -28027 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ