தேங்காய் நார் கம்பெனியால் பொதுமக்கள் பாதிப்பதாக புகார்
நாமக்கல், ப.வேலுார் அருகே செயல்படும் தேங்காய் நார் கம்பெனியால், பொதுமக்கள் பதிப்பதாக மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ப.வேலுார் தாலுகா, அருணகிரிபாளையம், வெங்கமேட்டில் அருந்ததியர் தெரு உள்ளது. அப்பகுதியில் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேங்காய் நார் அரைக்கும் கம்பெனி தொடங்கப்பட்டது. அங்கிருந்து பறந்து வரும் நார் மற்றும் புகையால், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், எங்கள் தெருவில், 40 ஆண்டுகாளாக வசிக்கும், 42க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இருந்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை. என்வே இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.