நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு காங்.,கூடுதல் அமைப்பாளர் நியமனம்
நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு, காங்., கட்சியில் கூடுதல் அமைப்பாளராக வீரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில், காங்., கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, மாநில தலைவர் செல்வபெருந்தகை மேற்கொண்டு வருகிறார். தற்போது, கிராமம், நகரம், மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும், கட்சியை பலப்படுத்தும் வகையில் லோக்சபா, சட்டசபை தொகுதி வாரியாக அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு, சேலம் மாவட்டம் ஆத்துார் எம்.எல்.ஏ., சுந்தரம் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் அமைப்பாளராக, காங்.,கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர் வீரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ளார். மேலும், மாவட்ட தலைவர்கள், லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியினர் அவருடன் இணைந்து காங்கிரஸின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளில் சிறப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். லோக்சபா தொகுதி கூடுதல் அமைப்பாளருக்கு, கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.