கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை
கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனைபவானி, டிச. 4-பவானி செல்லியாண்டியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா வரும், 8ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் விழா ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பிரபாத் மகேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி, தி.மு.க., நகர செயலாளர் நாகராஜன், அ.திமு.க., நகர செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக, பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், பவானி இன்ஸ்பெக்டர்கள் முருகையன், ரவி, சரவணக்குமார் ஆலோசனை வழங்கினர். விழாவை முன்னிட்டு கூடுதுறையிலிருந்து, ௫,௦௦௦க்கம் மேற்பட்டோர் பங்கேற்கும் தீர்த்தக்குட ஊர்வலம் நாளை நடக்கிறது. இதற்கான வழித்தடம், போக்குவரத்து மாற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.