உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை அமைக்க எதிர்ப்பு பின்வாங்கிய மாநகராட்சி

சாலை அமைக்க எதிர்ப்பு பின்வாங்கிய மாநகராட்சி

நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி, 39-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகரில், தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, நேற்று சாலையை முழுமையாக பெயர்த்து எடுத்துவிட்டு, மீண்டும் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், 'பழைய சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்; இல்லையெனில் சாலை போடக்கூடாது' எனக்கூறினர். இதையடுத்து, 'பேஜ் ஒர்க்' போட மட்டுமே அனுமதி உள்ளது எனகூறிவிட்டு, அங்கிருந்து வாகனங்களை எடுத்துக்கொண்டு சாலை அமைக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சென்று விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ