நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம் காப்பகம் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
நாமக்கல்: 'மாநகராட்சியில் நாய்கள் நடமாட்டம் அதிக-ரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல் மாநகராட்சியில், கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி முன்-னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:சரவணன், கவுன்சிலர்: மாநகராட்சியில், 39 வார்-டுகள் உள்ள நிலையில், சில வார்டுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து வார்டுகளையும், ஒரே நிலையில் அணுக வேண்டும்.நந்தகுமார், கவுன்சிலர்:மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட வார்டுகளில், பல்வேறு பகுதிகளில் போதிய தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரவில்லை. இதுகுறித்து, பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நட-வடிக்கை எடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்: நாமக்கல் மாநக-ராட்சி பகுதியில், தெரு நாய்கள் நடமாட்டம் அதி-கரித்து காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவ-தோடு, மாநகராட்சி பகுதியில் நாய்கள் காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலாநிதி, மேயர்: மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளும் சமமாகவே பார்க்கப்படு-கிறது. எவ்வித பாரபட்சமுமின்றி பணிகள் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட வார்டு பகுதியில் குடிநீர், தெரு-விளக்கு வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். விரைவில் பணிகள் நிறைவடையும். நாய்கள் காப்பகம் அமைப்பது குறித்து, ஆலோசித்து நடவ-டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து, 162 தீர்மானங்ள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.