காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தினமும் நீர் பங்கீடு முறை: கள் நல்லசாமி
நாமக்கல்: ''காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தினமும் நீர் பங்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, விவசாய முன்-னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தமிழக அரசால் தடை செய்-யப்பட்ட, 'கள்'ளை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்திருந்-தனர். தகவலறிந்து வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், 'பாட்டிலில் உள்ள கள்ளை அப்புறப்படுத்துங்கள்' எனக்-கூறினர். அதனால், விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்கு-வாதம் ஏற்பட்டது. மேலும், கள்ளை அகற்ற முடியாது; முடிந்தால் கைது செய்யுங்கள் என, ஆவேசமாக தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள், பெண்கள் என அனைவருக்கும், 'கள்' வழங்கப்பட்-டது.இதையடுத்து, 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறி-யதாவது:காவிரி நீர் குறித்து தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தினமும் நீர் பங்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம், புதுச்சேரி மாநிலத்திற்கு உண்டான தண்ணீரை தேக்க கூடாது. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கள்ளுக்கான தடை குறித்து பேச வேண்டும். அவ்வாறு பேசவில்லை என்றால், அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வாய்ப்பில்லை. பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, தமிழகத்திற்கு அழைத்து வந்து, மதுவி-லக்கு மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டிற்கு, அரசியல் கட்சி-களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.