உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழிற்சாலை கழிவுநீரால் விளைநிலம் பாதிப்பு: தடை விதிக்க மக்கள் கோரிக்கை

தொழிற்சாலை கழிவுநீரால் விளைநிலம் பாதிப்பு: தடை விதிக்க மக்கள் கோரிக்கை

நாமக்கல், நவ. 12-'தொழிற்சாலை கழிவுநீரால் கால்நடைகள், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அவற்றை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்' என, கபிலக்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ப.வேலுார் தாலுகா, கபிலக்குறிச்சியில் எந்த அனுமதியும் பெறாமல், தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுற்று வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளில் கலந்து பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. அதனால், அருகில் உள்ள கிராமங்களில் குடிநீர் கெட்டுப்போய்விட்டது. தண்ணீர் கருமை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன், ஆடு, மாடு, கோழி போன்றவையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம், கால்நடைகள், கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆலைக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், கழிவுநீர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை