மேலும் செய்திகள்
பயன்பாடு இல்லாத தொட்டி டவுன் பஞ்., மக்கள் அவதி
17-Jul-2025
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட தினசரி வாழைத்தார் சந்தை, பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படுகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவித்த வாழைத்-தார்களை தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுத்த வாழைத்-தார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க-ளுக்கு லாரி, சரக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி நுாற்றுக்கும் மேற்-பட்ட வியாபாரிகள், விவசாயிகள் வாழை சந்-தைக்கு வருகின்றனர்இந்நிலையில், வாழைத்தார் சந்தையை சுற்றி கட்டப்பட்டுள்ள, டவுன் பஞ்., காம்பவுன்ட் சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், சந்தைக்கு வரும் விவசாயில் அச்சத்-துடனே ஆபத்தான முறையில் அப்பகுதியை கடந்து செல்கினறனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், காம்பவுண்ட் சுவரை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Jul-2025