உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தமங்கலம் யூனியன்அலுவலக வாசலில் ஆபத்து

சேந்தமங்கலம் யூனியன்அலுவலக வாசலில் ஆபத்து

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் யூனியன் அலுவலகம், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு, யூனியனில் உள்ள, ஏழு வார்டுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதேபோல், தற்போது, 'கலைஞர் கனவு இல்லம்' திட்ட பணிகள் நடப்பதால் பயனாளிகள் சிமென்ட், கம்பிகள் உள்ளிட்டவை கொண்டு செல்ல ஆட்டோக்களில், யூனியன் அலுவலகத்திற்குள் வரும் நிலையில், யூனியன் அலுவலக நுழைவாயில் துாண் உடைந்துள்ளது. எப்போது விழுமோ என்ற நிலையில், பல மாதங்களாக அப்படியே உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வருவோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும், இந்த யூனியன் அலுவலகம், இரவு நேரங்களில் பூட்டப்படாமல் உள்ளதால், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, யூனியன் அலுவலக நுழைவாயில் துாணைசரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை