உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்களால் ஆபத்து

அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்களால் ஆபத்து

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் காத்திருக்கிறது.பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மேம்பாலத்தின் கீழே உள்ள தடுப்பு சுவர் மீது சில மாதங்களாக அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். அவ்வாறு வைக்கும் பிளக்ஸ் பேனர்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்பி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.கடந்த சில நாட்களாக, மேம்பாலத்தின் கீழே இடைவெளி பகுதியில் வரிசையாக மெகா பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். பலமாக காற்று வீசினால், இந்த பிளக்ஸ் பேனர்கள் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக விழுந்து கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனர் தயாளன் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், இன்று அகற்றப்படும். மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை