உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தண்டவாளத்தில் ஆபத்தான போட்டோ ஷூட்

தண்டவாளத்தில் ஆபத்தான போட்டோ ஷூட்

பள்ளிப்பாளையம்: கீழ்காலனி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நின்று, இளைஞர்கள் ஆபத்தான முறையில், 'போட்டோ ஷூட்' நடத்தி வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாதை செல்கிறது. இந்த ரயில்வே பாதை தண்டவாளத்தின் நடுவே, நேற்று மாலை இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் நின்று கொண்டு வீடியோ, போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தண்டவாள பகுதியில் ஆபத்தான முறையில், இதுபோல் வீடியோ, போட்டோ எடுக்கும் இளைஞர்களை, ரயில்வே போலீசார் கண்காணித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ