உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி வரத்து சரிவு

குண்டுமல்லி வரத்து சரிவு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையம் மற்றும் முத்துக்காபட்டி பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குண்டுமல்லி பயிரிட்டு வருகின்-றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால் இங்கு விளையும் பூக்கள் பெரி-யதாகவும், நறுமணம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை